தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்.*
*தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்.* 1. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது, என்னால் முடியாது, எனக்கு தெரியாது என்று என்று உங்களை நீங்களே தாழ்வுபடுத்தாதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை உலகில் எவருக்கும் அமைந்ததில்லை. மனித வாழ்க்கையே போராட்டங்கள் நிறைந்ததுதான். 2. எந்த மொழி உங்களால் சரளமாக பேச முடியுமோ அந்த மொழியில் பேசுங்கள், அரைகுறையாக பேச தெரிந்த மொழியை உபயோகிக்கும்போது சில தடுமாற்றங்கள், உளறல்கள் உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்துவிடும். 3. சிலருக்கு பேச்சாற்றலால் தான் சொல்லவந்த விஷயத்தை ஒருவருக்கு புரியவைக்க முடியும், பலருக்கு பேச்சாற்றல் இருக்காது ஆனால் எழுத்துமூலமாக தான் சொல்லவந்ததை தெளிவாக சொல்லும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள். உங்கள் திறமை எது என்று புரிந்து அதன்படி செயல்படுங்கள், பெரும்பாலும் பேச்சை காட்டிலும் எழுத்து மிகவும் வலு வாய்ந்தது, 3. ஒருவிசயத்தை கற்றுக்கொள்ள சிலருக்கு படித்தால் புரிந்துவிடும், சிலருக்கு அனுபவப்பூர்வமாக பார்த்தால் புரியும், சிலருக்கு யாராவது அதை எடுத்து சொன்னால் புரியும், உங்களுக்கு எது பிடிக்கும் என்பதை தேர...