கோவம் - நல்லது.!
*கோவம்*
கோவம் - நல்லது.!
கோவம் மனதிற்கு மருந்து.
கோவத்தை மனதிற்குள் அடக்காமல், வெளிப்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்..!
இப்படி நான் சொல்வது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.
ஆனால் இப்பதிவை முழுவதுமாகப் படித்து முடிக்கும்போது உங்களுக்கு உண்மைப் புரியும்.
எதனால் நமக்கு கோவம் வருகிறது ?
ஒருவகையான மன அழுத்தத்தின் விளைவே கோவம்.
ஆனால் கோவம் ஒரு மருந்து என்றால் நம்புவீர்களா?!
ஆம்,
குக்கரில் சேப்டி வால்வ் (safety valve) என்று ஒன்று இருக்கும். அதன் நோக்கம் என்ன தெரியுமா? உள்ளே தேவையற்ற (அளவுக்கு அதிகமாக) பிரஷர் (pressure) ஏற்படும் போது குக்கர்(cooker) வெடித்துவிடாமல் இருக்கத்தான் இந்த safety value. இதன் வழியே உள்ளே உள்ள ஆவி வெளியாகி குக்கரை காப்பாற்றும்.
இதே போலத்தான் மின்சாதனம் பழுதாகமல் இருக்க ஃபீயூஸ் வயர் (fuse wire).
இதை புரிந்து கொண்டீர்களானால் கோபத்தை புரிந்து கொள்ளலாம்.
நாம் மனதில் சொல்ல முடியாத பிரச்சனைகளுடன் உழண்று கொண்டிருப்போம். சமூக, சூழல் காரணமாக நாம் அவற்றை வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைத்திருப்போம்.
இந்த அழுத்தம் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் போது கோவமாக வெளியெறும்போது, மனம் இலேசாகிவிடும்.
*கோவம் மனதிற்கு மருந்து*
ஆனால் அந்த கோபம் ஏற்படுத்திய விளைவு ..?
அது மற்றொரு பிரச்சனைக்கு தூண்டுகோலாக இருந்துவிடும்.
இதற்கு தீர்வு ...?!
கோபம் வரும் பொழுது அதை அப்படியே நேரடியாக வெளிப்படுத்துவதைவிட, பாதுகாப்பாக கோவத்தை வெளிப்படுத்துவதே சிறந்தது.
இதனையே "மடை மாற்றம்" என்பர்
கோபம் ஒரு அருமருந்து. அதே சமயம் பிறர் மீது அதைகாட்டாமல் அதை பக்குவமாகவும், பாதுகாப்பாகவும் மடை மாற்றமாக வெளிப்படுத்துவதன் மூலமாக நிச்சயம் நாம் ஒரு தெளிவான மனதைப்பெறுவோம்
Friends "உங்கள் வீட்டில், உணவு சமைத்து உண்டப் பிறகு, உணவுக் கழிவுகளை என்ன செய்வீர்கள்?
சமையலறையில், பாத்திரம் கழுவும் தொட்டிக்கு அருகில் ஓர் dustbin ல் உணவுக் கழிவுகளை கொட்டி வைத்து, மறுநாள் அந்த உணவுக் கழிவுகளை வெளியேற்றிவிடுவீர்கள்" அல்லவா?
ஒருவேளை அந்த உணவுக் கழிவுகளை சமையலறையிலிருந்து மறுநாள் அப்புறப் படுத்தாவிட்டால் என்னவாகும்?
ஒருவாரக் காலம் உணவுக் கழிவுகள் அகற்றப் படாமல், dustbin ல் மென்மேலும் கழிவுகள் சேர்க்கப் பட்டால், அந்த சமையலறை என்னவாகும்...?
உணவுக் கழிவுகள் அழுகி, சமையலறை முமுவதும், ஏன் வீடு முழுவதும்கூட நாற்றமெடுக்காதா..?
உடல் கழிவுகளான சிறுநீர், மலம் மூன்று நாட்கள் வெளியேறாவிட்டால் நமது உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதுத் தெரியுமா...?
ஆம்.., சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகள் மூன்று நாட்கள் வெளியேறாவிட்டால், அப்போதுதான் உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டியதின் அவசியத்தையே நாம் உணருவோம்....
இத்தகைய நிலையில் என்ன செய்ய வேண்டும்..?
உடல் கழிவுகள் வெளியேறாததால் ஏற்படும் தலைவலி, வயிற்று வலி, வாந்தி, தலை சுற்றல், உணவு சாப்பிட முடியாத நிலை...., இவை ஒவ்வொன்றிற்கும் தனித் தனியே மருந்து எடுப்பதால், பிரச்சனை முழுமையாக சரியாகி விடுமா..?
அல்லது,
உடல் கழிவுகளைப் பாதுகாப்பாக வெளியேற்றனுமா..?
எது உகந்தது? எது சிறந்தது?
ஆம், பெரும்பாலான உடலியல் பிரச்சனைகளுக்கும், நோய்களுக்கும் அவரவர், வெளியேற்றாமல் அடக்குகின்ற மனக் கழிவுகளேக் காரணமாகின்றன.
உங்களுக்கு மிகவும் பிடித்த இனிப்பு அல்லது உணவுப் பதார்த்தத்தை நான் உங்களுக்குத் தருவதாக வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் மிகுந்த ஆர்வமாக அந்த இனிப்பை அல்லது உணவுப் பதார்த்தத்தைச் சுவைக்க உங்கள் கையில் எடுத்து வாயருகில் கொண்டு செல்கிறீர்கள்.
என்ன நடக்கும்?
நீங்கள் அந்த இனிப்பை அல்லது உணவுப் பதார்த்தத்தை வாயில் வைப்பதற்கு முன்பே, உங்கள் வாயில் எச்சில் சுரக்கும் அல்லவா?
இது எப்படி நிகழ்கிறது?
நீங்கள் உணவை வாயில் வைத்து சுவைக்க ஆரம்பித்தவுடனேதானே எச்சில் சுரக்கனும்..?
சரி, நீங்கள் கைகளில் எடுத்து, வாய்வரைக் கொண்டு சென்ற அந்த இனிப்பை, உணவுப் பதார்த்தத்தை வாயில் வைப்பதற்கு முன்னதாகவே யாரோ பறித்துவிடுவதாக அல்லது கீழேத் தட்டிவிடுவதாக வைத்துக் கொள்வோம்.
இப்போது, ஏற்கெனவே வாயில் சுரந்த எச்சில் என்னவாகும்....?
உணவு வாய்க்குப் போகாவிட்டால், சுரந்த எச்சில் மாயமாக மறைந்து விடப் போவது இல்லை.
இதேப் போல்தான்
கோவம், பயம், கவலை, மகிழ்ச்சி, அருவருப்பு, ஆச்சரியம் முதலிய முதன்மை உணர்சிகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே அடக்குவதால், அவ்வுணர்ச்சிகளின் காரணமாக சுரந்த ஹார்மோன்கள் நம் உடலிலேயேத் தேங்கி, ஹார்மோன் கழிவுகளா மாறி, உடலுக்கு பல வகைகளில் கேடு விளைவித்து, பல நோய்களை உருவாக்குகிறது.
உதாரணத்திற்கு,
அலுவலக உயர் அதிகாரியோ அல்லது அதிகார மேல் மட்டத்தில் உள்ள ஒருவரோ, காரமேயின்றி நம்மை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிடுவதாகக் கொள்வோம்; அதன் காரணமாக நமக்கு கோபம் எழுவது இயற்கை. கோபம் காரணமாக "அட்ரீனல்" எனும் ஹார்மோன் சுரப்பு நம்முள் நிகழும்.
எதிரியைத் தாக்குவதற்காகவும், எதிரியின் தாக்குதலிலிருந்து நம்மைத் தற்காப்பதற்குத் தேவையான துரித ஆற்றலைக் கொடுப்தற்காக சுரக்கப்படும் இந்த அட்ரீனல்ஹார்மோன் அளவு, நமக்கு ஏற்படும் கோபத்தின் அளவைப் பொறுத்தது.
ஒரு கணவன் - மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகக் கொள்வோம்.
அவர்களின் பிரிவு ஒரே நாளில் நடந்தேறியிருக்காது.
எந்த ஒரு மனைவியும் கணவனைப் பிரிந்து வாழ விரும்புவதில்லை.
அந்த பெண் அவரது கணவரைப் பிரிந்தது ஒரே நாளில் நடந்திருக்காது.
அதற்குமுன்பு பல நாட்கள் இருவருக்குமிடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும்.
அந்தப் பெண்ணை அவர் கணவர் உடலாலோ அல்லது மனதாலோ அல்லது உடல், மனம் இரண்டாலும்கூட பலநாட்கள், பலவாறு துன்புறுத்தியிருக்கலாம். அல்லது வேறு பெண்களுடன் கணவர் தவறான உறவு வைத்திருக்கலாம்.
அதனால் அந்தப் பெண்ணுக்கு கடுமையான மன உளைச்சளும், கோபமும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.
அந்தப் பெண் ஒவ்வொருமுறை கோபப் பட்டபோதெல்லாம், அவருடலில் அட்ரீனல் ஹார்மோன் அளவுக்கதிகமாக சுரந்திருக்கும்.
அந்தப் பெண்ணால் அவது கோபம் முழுவதையும் அவரது கணவரிடமோ அல்லது கணவரின் செயலுக்குக் காரணமானவர்களிடமோ முழுமையாக வெளிப்படுத்தியிருக்க முடிந்திருக்காது.
இதனால் அவர் உடலில் சுரந்த அட்ரீனல் ஹார்மோன் வெளியேற வழியின்றி, அவர் உடலிலேயேத் தேங்கி, அவருக்கேத் தீங்கு விளைவிக்கும் கழிவாகிறது. (உணவுக்கழிவு தேங்கி, அழுகி, சமையலறை முழுவதும் நாற்றமெடுத்ததுபோல)
ஒரு நாள் முழுவதும் நமது உடலிலிருந்து சிறு நீர் அல்லது மலம் வெளியேற்றப் படாவிட்டால் என்ன நடக்கும்...?
ஒரு வாரம் வெளியேற்றப் படாவிட்டால்.?
ஒரு மாதம் வெளியேற்றப் படாவிட்டால்..?
சிறுநீர் அல்லது மலம் வெளியேற்றப் படாவிட்டாலே உடலில் பல பிரச்சனைகளும், வியாதிகளும் வரும்போது, அமிலத் தன்மையுடைய அட்ரீனல் கழிவுகள் நம் உடலிலிருந்து நீண்ட காலம் வெளியேற்றப் படாவிட்டால்...?
அமிலத் தன்மை உடைய அட்ரீனல் ஹார்மோன் வெளியேற்றப்படாமல் நீண்ட காலம் உடலில் தேங்கிவிட்டால், உடலியல் ரீதியான பெரிய பாதிப்புகளும், ஆபத்தான நோய்களும் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
*வெளிப்படுத்த இயலாது, நீண்ட காலம் அடக்கிய கோபத்தால் ஏற்படும் தீமைகள்.*
வெளிப்படுத்த இயலாது, அதிக அளவிலான கோபத்தை நீண்ட காலம் மேலும் மேலும் அடக்கும்போது, கோபத்தினால் சுரந்த அட்ரீனல் ஹார்மோனும் உடலுக்குள்ளேயேத் தங்கி தேக்கமடைகிறது.
அமிலத் தன்மையுடைய அட்ரீனல் ஹார்மோன் வெளியேற்றப்படாமல், நீண்ட காலம் உடலுக்குள் தங்கி தேக்கமுறும்போது, முக்கிய உடல் உள் உறுப்புகளை பாதித்து, நோய்களைத் தோற்றுவிக்கின்றது.
அதிக அளவில் மன இறுக்கமும், மன அழுத்தமும் ஏற்படுகின்றது.

Comments
Post a Comment