இன்றையசிந்தனை வரிகள்*

 



*இன்றைய சிந்தனை வரிகள்*


ஊரே பகையானாலும்.

உலகமே உங்களை வெறுத்தாலும்

வினை வந்து சூழ்ந்தாலும்

விஷம் உண்ண தந்தாலும்......


நட்பே துரோகமாய் ஆனாலும்

நடு முதுகில் குத்தினாலும்.


எதை நீங்கள் பெற்றாலும்...

எதை நீங்கள் இழந்தாலும்....

*இது இறுதியானது அல்ல* என்று மட்டும் நம்புங்கள்.


இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது....

முடிவுகளைத் தான் கவனிக்கும்.....


விழும் வேகத்தை விட , எழும் வேகம் அதிகமாக இருந்தால்..

தோற்கடிக்க அல்ல...

உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான்.


நாம் இங்கே யாரையும் திருப்திப்படுத்த வரவில்லை.....

மாறாக நாம் நம்மோடு திருப்தியாக இருக்கவே வந்திருக்கோம்.....

அதற்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றோம்...


நீங்கள் உங்களில் அனுபவிக்கும் திருப்தி.....

உங்கள் உள்ளத்திலும், முகத்திலும், செயலிலும்...

தானே வெளிப்படும்...

உங்களை நீங்களே உணர்ந்தால்.


அதற்காக யாரையோ திருப்திபடுத்துகிறேன் என்று..,.

உங்கள் இயல்பை தொலைத்து முயலும்போது....

அது உங்கள் திருப்தியைத் தான் முதலில் பாதிக்கும்.


நீங்களே திருப்தியடையாத போது.....

யாரை திருப்திபடுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்....???


உங்களுள் நீங்கள் அடையும் திருப்தியே....

நீங்கள் அனுபவிக்கும் அற்புத தருணம்..


விழுந்துவிட்டால் விலகி ஓடுவதும்.....

எழுந்து விட்டால் விரைந்து வருவதும் தான்.....

இன்றைய உறவுகள்


சண்டையிட்டு விலகிய பின்பும்....

சொன்ன இரகசியம் காக்கப்படுமாயின்....

அதுவே சிறந்த உறவு.

Comments

Popular posts from this blog

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்!

ஊர்ந்து கொண்டிருந்தது.