வாழ்ந்து காட்டுவோம்
வாழ்ந்து கட்டுவோம்
● *பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து
முளைத்துக் காட்டுகிறது.
● ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது.
● பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.
● மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன.
● ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய
பறவைகளும் மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன.
● சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும்
சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.
● தண்ணீரே இல்லாத
பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன.
● ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும்,அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.
● இப்படிப் பல கோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதா..?
● எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.
● அதை ஏன் புலம்பிக் கொண்டு வாழ வேண்டும்?
● அதை ஏன் வெறுத்துக் கொண்டு வாழ வேண்டும்?
● அதை ஏன் தப்பிக்கப்
பார்க்க வேண்டும்?
● அதை ஏன் அழுது கொண்டு
வாழ வேண்டும்?
● மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.
● இது உன் வாழ்க்கை என்ற போது
மிச்சம் இருப்பது ஆனந்தத்தைத்
தவிர வேற என்ன இருக்கிறது.
● ஆகவே,..ஆனந்தமாக வாழ்வோம்,வாழ்ந்து காட்டுவோம்.உலகுக்கு ஒரு சான்றாக.

Comments
Post a Comment