பள்ளிவாசல் இமாம் திருடனா???
பள்ளிவாசல் இமாம் திருடனா???
ரமழான் மாதத்தில் ஒரு நாள் ஒரு குடும்பத்தினர் தமது ஊர் பள்ளிவாசல் இமாமை நோன்பு திறப்பதற்காக தமது வீட்டுக்கு அழைத்தனர்.
அவ்வீட்டுப் பெண்மனி உணவுமேசையை தயார்படுத்தும் வேளை அதில் காணப்பட்ட தனது கணவரின் பெரிய தொகைப் பணத்தை எடுக்க மறந்து விட்டாள்.
நோன்பு திறந்து முடிந்து பள்ளிவாசல் இமாம் திரும்பிச் சென்றதும் மனைவி மேசையின் மீது காணப்பட்ட பணத்தைத் தேடிய போது அதை அவள் காணவில்லை.
அவளுக்கு எந்தவொரு பிள்ளைகளும் கிடையாது. அன்றைய தினம் நோன்பு திறப்பதற்காக அவர்களது வீட்டிற்குச் சமூகமளித்த ஒரே மனிதர் இமாம் மாத்திரமே.
இமாம் அவர்கள் மீது சந்தேகப்பட்ட மனைவி தனது கணவரிடம் விடயத்தைக் கூறி அவரிடம் பேசும் போது இது சம்பந்தமாக வினவுமாறு வேண்டினாள். கணவன் " இது ஒரு குறை. எமக்கு அவருடன் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறினான். அது மாத்திரமன்றி கணவன் பள்ளிவாசலில் அந்த இமாமிற்குப் பின்னால் தொழுவதை யும் விட்டுவிட்டான்.
இவ்வாறே நாட்கள், மாதங்கள் என்று காலம் செல்கிறது. அடுத்த ரமழான் மாதம் உதயமாகிய போது கணவன் தனது மனைவியிடம் " நாம் கருணை, பாவமன்னிப்புடைய மாதத்தில் இருக்கின்றோம். எனவே நாம் அவரை மன்னித்து பழையதை மறந்து விட வேண்டும். அத்தோடு அந்த இமாமுக்கு இவ்வூரில் குடும்பத்தினர் யாரும் இல்லை. நாம் அவரை மறுபடியும் நமது வீட்டுக்கு நோன்பு திறப்பதற்கு அழைக்க வேண்டும்." என்று கூற மனைவி சிறிது நேரம் நிசப்தமாக இருந்து விட்டு அவரிடம் திருடப்பட்ட பணம் சம்பந்தமாக கட்டாயம் வினவ வேண்டும் என்ற நிபந்தனையில் அதற்கு இணங்கினாள்.
இமாம் அவர்கள் நோன்பு திறப்பதற்காக இவர்களது வீட்டுக்கு வருகை தந்து உணவு உட்கொண்டு முடிந்த போது கணவன் இமாம் அவர்களிடம் குறித்த பணம் சம்பந்தமாக வினவினார்.
இமாம் அவர்கள் தலைகுனிந்து அழ ஆரம்பித்தார். பின்பு கண்ணீர்த் துளிகள் அவரது இமையோரங்களில் வழிந்தோட தலையை நிமிர்த்திய போது அப் பெண்மணி " இமாம் அவர்களே! ஏன் அழுகின்றீர்கள்??" என்று கேட்டாள்.
இமாம் அவர்கள் கூறினார்கள் : " ஆம் நான் அப்பணத்தைக் கண்டேன். அதனை எடுத்து உங்களது ராக்கையிலுள்ள அந்த ஒரே ஒரு அல்குர்ஆனிற்குள்ளே வைத்தேன். நீங்கள் கடந்து சென்ற 365 நாட்களில் ஒரு நாள் கூட அல் குர்ஆனைத் திறந்து ஒரு வசனத்தைக் கூட ஓதாதது என்னை அழவைத்து விட்டது."
கணவன் ஓடிப் போய் அல் குர்ஆனைத் திறந்து பார்த்த போது அல் குர்ஆனில் ஸுரதுல் பாத்திஹா உள்ள முதல் பக்கத்திலேயே அப்பணம் காணப்பட்டது.
வாசகரே! நீர் இறுதியாக எப்போது உங்களது அல் குர்ஆனைத் திறந்தீர்கள்???

Comments
Post a Comment