வாசிப்பு மனிதனைபூரணப்படுத்தும்! வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் கற்பதல்ல. புத்தகம் மனிதனின் சிறந்த நண்பன். ‘கண்டது கற்க பண்டிதனாவான்’ எனும் முதுமொழி இதனை பறைசாற்றுகிறது. வாசிப்பு இல்லாமல் கற்றல் எனும் செயற்பாடே நிறைவு பெறாது. ஒரு சிறந்த வாசகனால் மட்டுமே சிறந்த எழுத்தாளனாக முடியும். ஒரு சிறந்த எழுத்தாளனால் மட்டுமே சிறந்த பேச்சாளனாக முடியும். ஆகவே மனித தொடர்பாடலின் மையப்புள்ளியே வாசிப்பு ஆகும். எவன் ஒருவன் வாசிக்காதவனாக இருக்கிறானோ அவன் மனதில், அறிவில், அறியாமை இருள் படிந்திருக்கும். வாசிப்பு என்பது ஒரு மனிதனின் குழப்பமான மனநிலையை அகற்றி நன்னிலைப்படுத்த உதவுகிறது. இதேபோன்று புதிய விடயங்கள் மனதில் இடம்பிடித்துக் கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை வாசிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், நல்ல நூல்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பனாக பல்வேறு பாத்திரங்களை வகிக்கின்றது. ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது! ...
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது. என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன . தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே. குரங்கு பெரிதாய்க் கு...
Comments
Post a Comment