இஸ்லாமிய குடும்பவியல் : மனைவியின் கடமைகள்

 

இஸ்லாமிய குடும்பவியல் : மனைவியின் கடமைகள்

குடும்ப வாழ்வில், ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை மட்டும் இஸ்லாம் கற்றுத் தரவில்லை. பெண்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குகின்றது. அவர்களும்தக்க முறையோடு நடந்திட வேண்டும் என்பதையும் மார்க்கம் கூறவே செய்கிறது.

கட்டுப்பட்டு நடத்தல்

தம்பதியர் கடமைகளில் மிகவும் முக்கியமானது, மார்க்கத்திற்கு முரணில்லாதமுறையில் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின்கடமையாகும் இறைவன்இயற்கையிலேயே ஆண்களை வலிமை மிக்கவர்களாகப்படைத்துள்ளான். மேலும் ஆண்கள், பெண்களுக்கும் குடும்பத்திற்கும் செலவுசெய்கிறார்கள் என்ற நிலையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவன்ஆகின்றான். எனவே பெண்கள், தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.இதையே கீழ் வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமதுபொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம்செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்!படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக்கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ்உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)

நல்ல மனைவி சிறந்த பொக்கிஷம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்குஅறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால்அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம்இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக்கொள்வாள்.

அறிவிப்பவர்: உமர் (ரலீ)

நூல்: அபூதாவூத் 1412

கட்டுப்படுவதன் உச்சக்கட்டம்

ஒரு மனைவி தனது கணவனுக்கு கட்டுப்படுவது எந்த அளவுக்கென்று அதன்உச்சக்கட்டத்தையே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால்பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் எனநபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா

நூல்: திர்மிதி 1079

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் அம்சம் தனது கணவனின்இடத்தில் வேறொரு ஆடவரை வைக்காமல் இருப்பதாகும். இது கணவனுக்குக் கடும்கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடத்தை வகிக்கும் விஷயமாகும். இந்தக் கற்பு ஒழுக்கத்தைப் பேணிக் காப்பதை, பெண்மணிகள் கவனத்தில்கொள்வது மிக மிக இன்றியமையாததாகும்.

கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக்காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும்,நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்,கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண் களும்,பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாகநடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்புநோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும்,பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும்,பெண்களும் ஆகியஅவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)

“உங்கள் படுக்கையை அடுத்தவர் களுக்கு வழங்காமல் இருப்பதும், உங்கள் அனுமதிஇல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக் காமல் இருப்பதும் பெண்களின் மீதுகடமையாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலீ)

நூல்: திர்மிதி 1083

Comments

Popular posts from this blog

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்!

ஊர்ந்து கொண்டிருந்தது.