புரிந்துணர்வு ... Category: கவிதை
புரிந்துணர்வு ...
- Category: கவிதை
புரிந்துணர்வு என்பது பொக்கிசம்.
பொக்கிசங்கள் அடைந்தவர்கள் பாக்கியவான்கள்*
புலப்படுகிறார்கள் கண்களுக்குத் தெய்வங்களாக,
புண்பட்டவர்களை புத்துணர்வாக்கிப் புரிய வைக்கிறார்கள் நிஜங்களை*
புதிய வாழ்வைப் புத்துணர்ச்சியுடன் தருகிறார்கள்*
புரிதல்கள் தொடரட்டும்.
புண்பட்டோரும் வாழட்டும்.
#####£########
புரிதலற்றோர் என்போர்
புண்பட்டோரை மொய்க்கும். புழுக்களே***
புது விதமாய் வர்ணித்தால்
மனித உருவிலான மாய நாகங்களே***
பிணங் கொத்திக் கழுகுகளாய்
பிறர் மனம் கொத்தி மகிழும் அற்பர்களே***
இரண்டு பேதங்களையும்
மனிதனுக் கொடையாகக் கொடுத்த இறைவனே,
உனக்கு ஏன் வஞ்சகம்?
போற்றுதலை ஏற்கும் இறைவா
தூற்றுதலையும் ஏற்றுவிடு***
புரிந்துணர்வற்றவர்களையும் படைத்தவன் நீ.
என்பதால் தூற்றல்களும் உனக்கேயுனக்காய்.
Comments
Post a Comment