Posts
சோதனைகளை சாதனையாக்கும் முறை
- Get link
- X
- Other Apps
சோதனைகளை சாதனையாக்கும் முறை... நமது வாழ்க்கை என்பது சோதனைகள் நிறைந்தது. அதனை புரிந்து கொண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றிட வேண்டும். நாம் அன்றாடம் பல பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும், நமது மனம் என்பது பலவிதமான சிந்தனைகளை உருவாக்கி தனது பணியை செவ்வனே செய்கிறது. மனசிந்தனைகள் தான் மனிதனின் வளர்ச்சியில், வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றன. நேர்மறை எண்ணங்களுடன் உருவாகும் மனசிந்தனைகள் உடல், மனம், செயல் அனைத்திலும் கலந்து இயக்கம் புரிந்து அவரது வாழ்க்கை பயணத்தை வெற்றியடையச் செய்கிறது. ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வியல் நிகழ்வோ பலவித மன சிந்தனைகள் மண்டைக்குள் எழும்பி ஒருவித பதட்டத்துடன் பணியாற்ற செய்யும். அவ்வாறு இல்லாமல் மன சிந்தனையை சீராக, சிறப்புடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். சிந்தனையை சிறப்பாக்கும் சீரிய வழிமுறை : ஒவ்வொரு மனிதனும் தன் சிறு வயது பருவத்திலிருந்து வளர்ந்த சிந்தனைகள், பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளில் பெற்ற வெற்றிதான் மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன. இவையே நிகழ்காலத்தில் ஏற்படும் பல சிக்கல்களை தீர்க்க உதவும் இவ்வாறான நேர்மறை எண்ணங்களே மனதை அமைதியாக்கும் சிறந்த சிந...
வாழ்க்கையை அழகா கொண்டு செல்ல ஆறு கட்டளைகள் எடுத்துக்கோங்க..
- Get link
- X
- Other Apps
வாழ்க்கையை அழகா கொண்டு செல்ல ஆறு கட்டளைகள் எடுத்துக்கோங்க... கஷ்டங்களும் அனுபவமும் சூழும்போது வாழ்க்கை நமக்கு நல்லபாடத்தையும் பாதையும்தெளிவாக காட்டும்.. வாழ்க்கையை அழகா கொண்டு செல்ல ஆறு கட்டளைகள் எடுத்துக்கோங்க..வாழ்வு ரொம்ப மகிழ்ச்சியா மாறிடும். 1.எதற்கெடுத்தாலும் எல்லாத்துக்கும் கவலை படாதீங்க. காலையில அழுதா மாலை சிரிப்போம்..துக்கமோ மகிழ்வோ எதுவோ அதிக நேரம் நம்ம உடல்நிலை எடுத்துக்காது. எல்லாம் கொஞ்ச நேரம். மீறி போனா அதை நீங்களே பிடிச்சு தொங்கறீங்கன்னு அர்த்தம். 2.யதார்த்தமாக பழகுங்க..அதான் முக்கியம்.யார் வேணா கீழிருந்து மேலையும் மேலிருந்து கீழேயும் ஒரு நாளிலியே மாறிடுவாங்க. எனக்கா இந்த நிலைமை ன்னு வாயடைச்சு போகாதீங்க.உங்களை விட அவமான பட்டவங்க எல்லாம் உலகத்துல இருக்காங்க. 3.எதையும் ஆழமாக நேசிக்காதீங்க.எதையும் ஆழமாக யோசிக்காதீங்க.ரொம்ப சிம்பிள் இது.நேசித்தலும் அதற்கான யோசித்தலும் தான் அழுகைக்கு அடிப்படை காரணம் என்ற தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க. 4.ஒருத்தவங்க போயிட்டாங்கன்னா கெஞ்சாதீங்க.வேணும் வரை இருந்துட்டு திடீர்னு போறாங்கன்னா கஷ்டபட வேண்டி...
சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்
- Get link
- X
- Other Apps
சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும் ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது. „இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!“ மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும். இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள். ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.. ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’ இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம். ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், ‘மீன் ...
நேர்மை
- Get link
- X
- Other Apps
நேர்மை! நேர்மை என்பது ஒருவர் உண்மைக்கு மாறாக அல்லது பிழைக்கு ஆதரவாக அல்லாமல் நேர்வழியில் நடந்துகொள்ளும் அல்லது செயல்படும் தன்மையை வெளிப்படுத்தும் மனித குணயியல்பு தொடர்பான ஒரு சொல்லாகும். குறிப்பாக ஒருவரின் "நேர்மை" என்பதனை ஒருவரின் உருவ அமைப்பை வைத்தோ, கல்வி அறிவை வைத்து, தொழில் அல்லது இருக்கும் பதவியை வைத்தோ மதிப்பிட முடியாது. காரணம் "நேர்மை" என்பது ஒருவர் நடந்துகொள்ளும் குணயியல்பை பொறுத்து தானாகவே வெளிப்படும் தன்மை கொண்டது. "நேர்மை" என்பதனை இன்னொருவகையில் கூறுவதாயின் உண்மையின் வழியில் நேராக நடந்துகொள்ளலைக் குறிக்கும். அதேவேளை ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சரியானது என கருதிய ஒன்று தவறு என அறிந்துகொள்ளும் போது, தனது தவறை மனதளவிலேனும் ஏற்று திருத்திக்கொண்டு, நேர் வழியில் நடக்கும் தன்மையையும் "நேர்மை" எனக்கொள்ளப்படும். "நேர்மை" ஒரு மதிக்கத்தக்க குணயியல்பின் வெளிப்பாடு.
புரிந்துணர்வு ... Category: கவிதை
- Get link
- X
- Other Apps
புரிந்துணர்வு ... Category: கவிதை புரிந்துணர்வு என்பது பொக்கிசம். பொக்கிசங்கள் அடைந்தவர்கள் பாக்கியவான்கள்* புலப்படுகிறார்கள் கண்களுக்குத் தெய்வங்களாக, புண்பட்டவர்களை புத்துணர்வாக்கிப் புரிய வைக்கிறார்கள் நிஜங்களை* புதிய வாழ்வைப் புத்துணர்ச்சியுடன் தருகிறார்கள்* புரிதல்கள் தொடரட்டும். புண்பட்டோரும் வாழட்டும். #####£######## புரிதலற்றோர் என்போர் புண்பட்டோரை மொய்க்கும். புழுக்களே*** புது விதமாய் வர்ணித்தால் மனித உருவிலான மாய நாகங்களே*** பிணங் கொத்திக் கழுகுகளாய் பிறர் மனம் கொத்தி மகிழும் அற்பர்களே*** இரண்டு பேதங்களையும் மனிதனுக் கொடையாகக் கொடுத்த இறைவனே, உனக்கு ஏன் வஞ்சகம்? போற்றுதலை ஏற்கும் இறைவா தூற்றுதலையும் ஏற்றுவிடு*** புரிந்துணர்வற்றவர்களையும் படைத்தவன் நீ. என்பதால் தூற்றல்களும் உனக்கேயுனக்காய்.
நல்ல மனோபாவம் முக்கியம்
- Get link
- X
- Other Apps
நல்ல மனோபாவம் முக்கியம் ஒரு தேசத்தில் ஓர் அரசன் இருந்து வந்தான். கூடிய மட்டும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகவே இராஜ்ய பாரத்தை வகித்து வந்தான். தான் நடந்து வரும் முறை பிரஜைகளுக்குத் திருப்திகரமாயிருக்கிறதாவென்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. தன்னுடைய மந்திரியைக் கூப்பிட்டு “நம் பிரஜைகள் நம்மிடம் என்ன மனோபாவத்துடன் இருந்து வருகிறார்களென்று தெரிந்து எனக்குச் சொல்ல வேண்டும்” என்று சொன்னான். அதற்கு மந்திரி “நான் அறிந்து சொல்வதைவிடத் தாங்களே நேரில் அறிந்து கொள்வதுதான் நல்லது. தங்களுக்கு சௌகரியப்பட்ட தினத்தில் மாறு வேஷத்துடன் என்னுடன் ஊருக்குள் வந்தால் தெரிந்து கொள்ளலாம்” என்றார். “அப்படியே ஆகட்டும்” என்று அரசனும் சம்மதித்து ஒருநாள் இருவரும் மாறு வேஷம் தரித்துக்கொண்டு மத்தியான வேளையில் புறப்பட்டு ஊரின் பக்கத்திலிருந்த நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஒரு கிழவன், அக்கரையிலிருந்த காட்டுக்குப் போய் அங்கு கிடக்கும் சுள்ளிவிறகுகளை சேகரித்துக் கட்டுக் கட்டாகக் கட்டிக்கொண்டு அன்றைய தினம் சாப்பாட்டை நடத்திவிடலாமென்ற எண்ணத்துடன், தலையில் ...